எதிர்வரும் BBL தொடருக்காக இங்கிலாந்து வீரர் டொம் கரனை (Tom Curran) பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள டாம் கரன், 2026-27 பருவகாலத்திற்கான பிரிஸ்பேன் ஹீட் அணியின் முதலாவது வெளிநாட்டு வீரராக இணைந்துள்ளார்.
300 T20 போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளையும், 145.89 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ள 31 வயதான இவர், ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறார்.
டொம் கரனின் சேர்க்கை அணிக்கும் இளம் வீரர்களுக்கும் பெரும் பலமாக இருக்கும் என பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
BBL தொடரில் 52 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட டாம் கரனின் வருகை பிரிஸ்பேன் ஹீட் அணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










