வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பராமரிக்க முடியாது என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தனர்.
அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்னாள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.