கிழக்கு ஜேர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாநில தேர்தலில், தீவிர வலதுசாரி “ஜேர்மனிக்கான மாற்று” (AfD) கட்சி 43.8% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தது; இது சான்சலர் ஃபிரெட்ரிக் மேர்ஸின் ஆளும் CDU கட்சியின் 17.2%-ஐ விட இரு மடங்குக்கும் அதிகம்.
83 இருக்கைகள் கொண்ட மாநில பாராளுமன்றத்தில் AfD 39 இருக்கைகளை வென்றது; பெரும்பான்மைக்கு தேவையான 42-ஐ விட 3 இருக்கைகள் குறைவு.
2021 தேர்தலில் 20.8% மட்டுமே பெற்றிருந்த AfD, தமது வாக்கு வங்கியை இருமடங்காக்கியுள்ளது; CDU-இன் வாக்குகள் பாதியாக குறைந்துவிட்டன.
“நாங்கள் இந்த மாநிலத்தில் வரலாறு படைத்துவிட்டோம்” என AfD-இன் முதன்மை வேட்பாளர் உல்ரிச் சீக்மண்ட் (35) பெருமிதம் தெரிவித்தார்; இதை தேசிய அளவில் அதிகாரம் பெறுவதற்கான முதல் படியாக அவர் கருதுகிறார்.
AfD இணைத் தலைவர் ஆலிஸ் வெய்டெல், இதை “வரலாற்று சிறப்புமிக்க” வெற்றி என வர்ணித்தார்
77% வாக்குப்பதிவு சதவீதத்துடன், இது “கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமே” என ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மார்செல் ஃபிராட்ஷர் கருத்து.
AfD அரசாங்கம் அமையுமானால், குடியேற்றத்தை கடுமையாக கட்டுப்படுத்துதல், ரஷ்யாவுடன் உறவை மீட்டெடுத்தல், உக்ரைனுக்கான ஆதரவை குறைத்தல், யூரோவை கைவிடுதல் ஆகிய கொள்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பு.
ஜேர்மனியின் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளால் “தீவிர வலதுசாரி” என வகைப்படுத்தப்பட்டுள்ள இக்கட்சி, 2024ல் தூரிங்கியா மாநிலத்திலும் முதலிடம் பிடித்திருந்தது, ஆனால் மற்ற கட்சிகள் இணைந்து அதை ஆட்சிக்கு வர விடவில்லை; இம்முறையும் அரசாங்கம் அமைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.










