உலக சுகாதார அமைப்பின் 78ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த கூட்டம் நாளை திங்கட்கிழமை முதல் 27 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளதுடன் “ஒரு ஆரோக்கியமான உலகம்” என்ற கருப்பொருளுடன் நடைபெறவுள்ளது.
உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் சுகாதார அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து நாடுகளின் சுகாதாரத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரைத் தவிர, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க, ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நிஷாந்தினி விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.