சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கு 295 ரூபாயும் அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயம் செய்து கடந்த 3 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அத்துடன், பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் சிவப்பு சீனிக்கான சில்லறை விலை 330 ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் சில்லறை விலை 350 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சீனிக்காக விதிக்கப்பட்டிருந்த குறித்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளன.