
சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞன் கைது
முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கள்ளப்பாட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசுவமடுவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் மற்றும் சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். குறித்த இளைஞரை தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் குறித்த இளைஞன் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்