பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை திடீர் சோதனை செய்யப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
இதன் போது குறித்த நிறுவனத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வெளிக்காட்டப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
