நடப்பு சூப்பர் போல்(Super Bowl) சாம்பியனான சீட்டல் சீஹாக்ஸ்(Seattle Seahawks), 2026 NFL சீசனின் தொடக்க ஆட்டத்தில் நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ்(New England Patriots) அணியை 13–10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.
முதல் பாதியில் 10–0 என பின்தங்கியிருந்த சீஹாக்ஸ்(Seahawks), நான்காவது கால்பகுதியில் சிறப்பாக மீண்டு வெற்றியைப் பதிவு செய்தது. பேட்ரியாட்ஸ் குவாட்டர்பேக் டிரேக் மே(Patriots quarterback Drake Maye)-யின் மூன்று interceptions-கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானித்தன.
மேலும், Seahawks அணியின் ஆரம்ப குவாட்டர்பேக் சாம் டார்னால்ட்(quarterback Sam Darnold) இடுப்பு காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில், மாற்று குவாட்டர்பேக் ட்ரூ லாக்(quarterback Drew Lock) அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.










