மொனராகலை கும்புக்கன் ஓயாவில் உறவினர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
17 வயதுடைய குறித்த மாணவன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.