சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றில் மோட்டார் சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ் கிணறு நேற்று வியாழக்கிழமை இரவு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தொருவர் உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் லைட் வீதியில் வசித்துவரும் ஜானக சுரஞ்ஜீவ (வயது – 45) என்பவரே இவ்வாறு பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்