-சம்மாந்துறை நிருபர் ஷிஹாப் ஆகில்-
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2022 கல்வி ஆண்டில் இணைக்கப்பட்ட விவசாய உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்களுக்குரிய Diploma Level 5 Semester 1 பரீட்சை 2023.08.02 – 2023.08.19 நடைபெற்றது.
இப்பரீட்சைக்கு 55 மாணவர்கள் தோற்றி இருந்தனர். இப்பரீட்சை பெறுபேறு நேற்று வியாழக்கிழமை மாலை வெளியானது.
பரீட்சை முடிவுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96%. இதன்படி மாணவர்களின் அறிக்கை, ஆழுமையும் அனுபவமும் உள்ள வருகைதரு விரிவுரையாளர்களின் வழிகாட்டலும் தங்களுடைய முயற்சியும் தான் இப்பரீட்சை பெறுபேறுகள் என்றனர்.
ஆங்கில மொழிமூல 10 பாடங்கள் கொண்ட பரீட்சையிலேயே மாணவர்கள் சித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.