-அம்பாறை நிருபர்-
சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும் கொண்ட கட்டிடத்தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதியினையும் பார்வையிட்டார்.
இதேவேளை அக்கட்டிடத்துக்குத் தேவையான ஒரு தொகுதி இலத்திரனியல் உபகரணங்களையும் வைத்திய அத்தியட்சகர் பீ,பிரபாசங்கரிடம் பிராந்திய பணிப்பாளர் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ,எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.