
சம்மாந்துறையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து
-சம்மாந்துறை நிருபர்-
கல்முனை அம்பாறை பிரதான வீதியில், ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
அம்பலாங்கொடை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு பயணிக்கையில், சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் வீதியை விட்டு விலகி, அருகில் உள்ள சுவரில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature
Beta feature