ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகப் பயனர்கள் தங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட அல்காரிதம் பரிந்துரைகளை (recommendation algorithms) முடக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
முன்மொழியப்படும் “Digital Duty of Care” சட்டத்தின் கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களிடம் தங்கள் அல்காரிதம் மூலம் உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுத்து காட்டும் முறையைத் தொடர வேண்டுமா அல்லது அதை முடக்க வேண்டுமா என்று தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
அல்காரிதம்களை முடக்கியால், பயனர்கள் தங்கள் விருப்பங்கள் மற்றும் இணையச் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளுக்குப் பதிலாக, தாங்கள் பின்தொடரும் நபர்கள் அல்லது கணக்குகளின் பதிவுகளை அதிகம் பார்க்க முடியும்.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், இணைய அடிமைத்தன்மை மற்றும் இளைஞர்களை பாதிக்கக்கூடிய உள்ளடக்கங்களின் பரவலைக் கட்டுப்படுத்துவது ஆகும். சட்டத்தை மீறும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 100 மில்லியன் ஆஸ்திரேலிய டொலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்படலாம்.
எனினும், இந்த முன்மொழிவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பும் உள்ளது. எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள், இது சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் என்றும், அரசாங்கத்தின் தணிக்கை அதிகாரத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், அல்காரிதம் பரிந்துரைகளை முடக்கும் விருப்பத்தை வழங்குவது மட்டுமல்லாமல், பயனர்கள் முதலில் அனுமதி அளித்தால் மட்டுமே அல்காரிதம் சார்ந்த ஊட்டத்தை (opt-in) செயல்படுத்த வேண்டும் என்ற கடுமையான அணுகுமுறையையும் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி ஆதரித்து வருகிறது.











