Last updated on October 7th, 2024 at 10:49 am

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: இருவர் கைது | Minnal 24 News %

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: இருவர் கைது

நுவரெலியா – பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்