சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 57 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.