-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்டத்திற்கு முரணாக மண் அகழ்வில் ஈடுபட்ட 3 டிப்பர் வண்டியின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்படாத வேறு பகுதியில் மணல் அகழ்வதற்கு பயன்படுத்தும் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டு, டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெயை பயன்படுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த டிப்பர் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.