க.பொ.த (சா/த) பரீட்சைகள் தொடர்பிலான அசௌகரியங்களை அறிவிக்க துரித இலக்கம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் அசௌகரியங்கள் காணப்பட்டால் பரீட்சார்த்திகள் 1119 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சார்த்திகள் பரீட்சைகள் மத்திய நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வருகைத்தருமாறும் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க