கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

நுவரெலியா தலவாக்கலையில், இன்று செவ்வாய்க்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யுவதியின் சடலம் பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது மேலதிக விசாரணைகளின் பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

யுவதி உயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டாரா என்பது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க