கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.