-யாழ் நிருபர்-
யாழ்.ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் பகுதியளவில் மூழ்கியது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் வேறு எவருக்கும் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
கப்பலை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.