கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் இல்லத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லும்போது அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்