கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார முன்னாள் பீடாதிபதி பாலசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமுத உரையினை பேராசிரியர் அ.சண்முகதாஸும், அமுதம் பகிரும் உரையினை பேராசிரியர் சி.மௌனகுருவும் நிகழ்த்தினர்.

அமுதவிழாவில் வெளியீடு செய்யப்பட்ட நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொள்ள, நூல் அறிமுகவுரையினை மகுடம் சஞ்சிகை ஆசிரியர் வி.மைக்கல் கொலின் நிகழ்த்தினார்.

இதன்போது அமுதவிழா நாயகன் பேராசிரியர் சி.மௌனகுரு பல்வேறு பிரமுகர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவப்படுத்தப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்