குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

 

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியை சேர்ந்த வெள்ளைக்கண்ணு குணசேகரம் (53 வயது) எனும் 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்