கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் முதல்முறையாக இடம்பெற்ற மும்மொழிக் கதம்பம்

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திலுள்ள தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மும்மொழிக் கதம்ப நிகழ்வு கடந்த புதன்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தி.பத்மசுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரும், அதிதிகளாக மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை, மேற்படி பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் கே.சிறிபிரேமசாயிசிவம், ஏயூலங்கா நிறுவன திட்ட இணைப்பாளர் ஏ.அனுலா, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்ப் பாட ஆசிரிய ஆலோசகர் பி.சதீஸ்குமார், ஆங்கிலப்பாட வளவாளர் ஜி.ஜுட்ஸ்குமார், சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் எஸ்.மாணிக்கவாசகம், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ரி.குணரெத்தினம், ம.சதீஸ்குமார், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளத் தலைவர் ம.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் ஆலோசனையும் வழிகாட்டல் பொறுப்பாசிரியர் ரோஜாரமணி இருதநாதயன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடாத்தப்பட்டு, இப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மாணவர்களின் மும்மொழியிலான பல்வேறு வகையான கலைப் படைப்புக்கள் அரங்கேற்றப்பட்டது.

ஏயூலங்கா நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்