‘கிறீம் பூசினால் அழகாய் இருப்பீங்க’ : ஆசிரிய ஆலோசகர் பெண் ஆசிரியருக்கு கொடுத்த டிப்ஸ்

-யாழ் நிருபர்-

 

யாழ். வலய ஆசிரிய ஆலோசராக கடமையாற்றும் ஆண் ஒருவர் பாடசாலை ஒன்றிற்கு கடமையின் நிமித்தம் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர் குறித்த பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ பேசி உள்ளார்.

குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள் யார் நீங்கள் என கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர் நான் தீபக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றி விட்டு யாழ்.வலயத்திற்கு வந்திருக்கிறேன் என்றாராம்.

திடீரென ஒரு வகுப்புக்கு சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் பேசியுள்ளார். அதன்போது சில ஒவ்வாத வார்த்தை பிரயோகங்களை பிரியோகித்ததுடன் நீங்கள் கிறீம் பூசுவது இல்லையா? பூசினால் அழகாய் இருப்பீர்கள் என புது டிப்ஸ் கொடுத்துள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து பல முறைப்பாடுகள் வெளிவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளரை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோதுஇ குறித்த ஆசிரிய ஆலோசகர் பாடசாலை சென்ற போது தமக்கு அறிவிக்காமல் சென்றதாகவும் குறித்த பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமக்கு செவி வழி மூலமான முறைப்பாடு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்