கிராம உத்தியோகத்தர் சேவையின் 60 ஆவது ஆண்டு நிறைவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை கிராம உத்தியோகத்தர் சேவையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி இந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்த கிராம உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

;