கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள காஸாவுக்கு உணவு வழங்குவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
காஸாவை முற்றுகையிட்டதன் பின்னர் அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதனை உறுதி செய்யும் வகையில் 10 வாரங்களின் பின்னர் இஸ்ரேல் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கிய சில மணிநேரத்தின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் 67 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 361 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.