காலி கஹவ கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் காணப்படாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் முதுகுப்புறமாக வலது தோற்பட்டை அருகே ஆந்தையொன்றின் உருவம் பச்சை குத்தப்பட்டுள்ளது.
மேலும் இடது தோற்பட்டையிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது. குறித்த சடலம் கடற்தொழிலாளர் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சில நாட்களுக்கு முன்னதாக அவர் படகில் இருந்து தவறிக் கடலில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.