காதலனுக்கு போதை வழங்கி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி

 

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் தொழிலதிபரான காதலனை போதையில் ஆழ்த்தி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி.

ஹல்த்வானியின் டீன் பானி பகுதிக்கு அருகே ஜூலை 15 ஆம் திகதி காரில் இருந்து காலில் பாம்பு கடித்த அடையாளத்துடனும் காரின் தீயணைப்பு அமைப்பு செயற்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஆணின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் அங்கித் சவுகான் (வயது – 30) என்பவரே காரில் சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

தொழிலதிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், பாம்பு விஷத்தால் அவர் இறந்தது தெரிய வந்ததுள்ளது.

பொலிஸார் விசாரணைகளின் போது அங்கித் சவுகானின் தொலைபேசி அழைப்பு விவரங்களை பொலிஸார் ஆராய்ந்த போது, அவர் மஹி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டறிந்தனர். அந்த பெண்ணின் தொலைபேசி அழைப்பு விபரத்தை கண்காணித்த போது, அவர் பாம்பு பிடிக்கும் ரமேஷ் நாத்திதுடன் தொடர் கொண்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரமேஷ் நாத் என்ற பாம்பு பிடிக்கும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தொழிலதிபரின் காதலியான மஹி என்ற டோலி ஆர்யா, அவரது நண்பர் தீப் காந்த்பால் மற்றும் அவரது இரண்டு வீட்டு உதவியாளர்கள் தலைமறைவாக உள்ளனர்.

மேலும், ஜூலை 14 அன்று, மஹியின் வீட்டிற்கு சௌஹான் சென்றபோது குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் சம்பவ இடத்தில் இருந்தனர். அவர்கள் சௌஹானை மது அல்லது வேறு ஏதேனும் பொருளைக் குடிக்கச் செய்திருக்கலாம், அது அவரை மயக்கமடையச் செய்து பின்னர் அவர் மீது நாகப்பாம்பை விட்டுள்ளனர். பாம்பு கடித்து அவர் உயிரிழந்துள்ளர் என பொலிஸார் கூறினர்.

மஹி பல ஆண்டுகளாக சௌஹானை பணம் கேட்டு மிரட்டிக்கொண்டிருந்தார், ஆனால் பின்னர் காதலனை விட்டு பிரிய விரும்பினார். ஆனால் சௌஹானால் மஹியை பிரிய முடியாமல், அவரது உறவை தொடர்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்