2026 ஆம் ஆண்டுக்குள் கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தக் கோரி, கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலியில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை தொடர்ந்து நான்காவது நாளாக இடம்பெறுகின்றது
அமைச்சரவை இந்த விடயத்தில் உறுதியான முடிவை எடுக்கும் வரை, சத்தியாக்கிரக போராட்டம் தொடரும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளம் சேர்க்கப்பட்டதால், ஒத்திவைக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு தொடர்பான கல்வி சீர்திருத்தங்களை, உடனடியாக செயல்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.