
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு முன்னால் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கந்தளாய், சினிபுர கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 30 ஆண்டுகளாக பயிர்ச்செய்கை மேற்கொண்டுவந்த தங்கள் விவசாய நிலங்களை வேறொரு தரப்பினருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக தாங்கள் செய்த பயிர்ச்செய்கை நிலங்கள், வேறு தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவை மிகவும் நியாயமற்ற முறையில் பிற தரப்பினருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் 200இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அவர்கள் குறித்த நிலத்தை மீண்டும் பயிரிடுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நிலங்களை முன்பு போலவே தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மற்ற விவசாயிகளுக்கு ஏராளமான வெற்று நிலங்கள் இருப்பதாகவும், அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.