கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் குழந்தையின் சடலம் மீட்பு

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உடைந்த கண்ணாடித் துண்டுகளினால் ஏற்பட்ட காயங்களுடன் ஐந்து வயது குழந்தையின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

உடைந்த போத்தலில் இருந்து கண்ணாடித் துண்டுகளால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக கிடைத்த தகவலையடுத்து, முல்லேரிய பொலிஸார்இ கட்டிடம் ஒன்றில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹல்பராவ, மாலம்பே பகுதியைச் சேர்ந்த 05 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்