அம்பலாந்தோட்டை, மதயமலலந்த, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதயமலலந்த பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உபுல் பிரியந்த (வயது – 48) என்ற நபரே இவ்வாறு உயிர் இழந்துள்hர்.
யானைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கிராமத்திற்குள் புகுந்ததால், இன்று காலையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கிராம மக்களுடன் அந்த இடத்திற்கு சென்ற போதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அத்துமீறி நுழைவதால் விவசாயம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிதரங்ககம விகாரையின் தலைவர் சுகுணசிறி தேரர் தெரிவித்துள்ளார்.