-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.
குறித்த கடை எரிந்ததில் வாகன டயர் உட்பட பல உதிரிப்பாகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் எரிந்த மாதிரிகளை பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்