பமுனுகம கடலில் நீந்தச் சென்ற ஜா-எல-நிவந்தம பகுதியைச் சேர்ந்த தாயும் மூன்று குழந்தைகளும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் மூவரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் பமுனுகம கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, அந்தக் குழுவினர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாலிஷா பெர்னாண்டோ (வயது 35), வினுதி தஹம்சா (வயது 4), சதீஷ் அனுஹாஸ் (வயது 13), விஸ்வ பிரசாதி (வயது 11) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
இதுவரை மாலிஷா பெர்னாண்டோ, வினுதி தஹம்சா மற்றும் விஸ்வ பிரசாதி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் சதீஷ் அனுஹாஸ் இன்னும் மீட்கப்படவில்லை.
சதீஷ் அனுஹாஸைக் கண்டுபிடிப்பதற்காக, பொபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.










