கஞ்சாவுடன் வயோதிபர் கைது
-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து இன்றையதினம் புதன் கிழமை கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவரிடமிருந்து 0.92 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.