ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பகுதியில் மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ பகுதியில் வசித்து வரும் அக்பர் முஹம்மது ரிபான் (வயது – 35) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையிலிருந்து மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவரை சோதனையிட்ட போது 11 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபருக்கு பல நீதிமன்றங்களில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் புலன் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்