ஐக்கிய மக்கள் இளைஞர் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக மோகன் பிரகாஷ் தெரிவு

அம்பாறை மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணிக்கான மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த மோகன் பிரகாஷ் (ஆசாப்) திறந்த வாக்கெடுப்பு முறை மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை நகர சபை வாடி வீட்டு ஒன்று கூடல் மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தியின் தவிசாளருமான பிரசாத் சிரிவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னிலையில் அம்பாறை மாவட்டத்தின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அணியின் முதலாவது தமிழ் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணிக்கான இளைஞர்களை இணைக்கும் முக்கிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது மோகன் பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில், இளைஞர்களை கல்வி, தொழில் நுட்பவியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள் சார்ந்து வழிநடத்த உள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் எதிர்காலத்தில் செயல்பட உள்ளதாகவும், தெரிவித்திருந்தார்.