பதுளை – கொஸ்லாந்தை ரோஸ்பெரி தோட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்லாந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.