உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

அதன்படி, வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி சுமார் 250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க