புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹாகொடயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.