உங்கள் கனவில் யானை வந்தால் என்ன பலன்
இந்து மதத்தில் யானை விநாயகப் பெருமானுடன் இணைத்து இறைவனாக காணப்படுகிறது. அதுமட்டும் அல்ல, யானை ஒரு மங்கள சின்னமாக கருதப்படுகிறது .
கனவில் குட்டி யானையை கண்டால்:
கனவில் குட்டி யானை வந்தால் காரிய வெற்றி, செல்வ செழிப்பு உண்டாகபோவதாக அர்த்தம் என கூறப்படுகிறது
கனவில் வெள்ளை யானையை கண்டால்:
உங்கள் கனவில் வெள்ளை யானையைக் கண்டால், அது மிகவும் நல்ல அறிகுறி என்று கூறப்படுகிறது. இந்த கனவு உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கு இதுபோன்ற கனவுகள் வந்தால், கூடிய விரைவில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
கனவில் கருப்பு யானையை கண்டால்:
ஒரு நபர் தனது கனவில் கருப்பு யானையைக் கண்டால், அவர் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் நீங்கள் சில பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை குறிக்கிறது.
கனவில் யானைக் கூட்டத்தை கண்டால்:
ஒரு நபர் தனது கனவில் யானைக் கூட்டத்தைக் கண்டால், உங்கள் நிதி நிலைமை விரைவில் மேம்படும் என்று அர்த்தம். இத்தகைய கனவுகள் செல்வம் பெருகுவதையும் குறிக்கிறது.
🐘யானை மாலை போடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு பெரிய பதவி தேடி வரும் என்று அர்த்தம் என கூறப்படுகிறது.
🐘யானை மீது சவாரி செய்வது போல கனவு வந்தால் குடும்பத்திலும் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏட்டப்போகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்றத்தை பெறலாம்
🐘யானை உங்களை தாக்குவதைப் போல கனவு கண்டால் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் சங்கடங்கள் ஏற்படலாம்.
🐘யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு வந்தால் உங்கள் அனைத்து காரியங்களுக்கும் வெற்றி அடையும்.
🐘மதம் பிடித்த யானையை கனவில் வந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை முன்கூட்டியே உணர்த்துவதாகும்.
🐘யானை நட்பாக இருப்பது போல கனவு வந்தால் நெருங்கமானவர்களிடம் நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.
🐘யானை இறந்திருப்பதுபோல் கனவில் வந்தால் நீங்கள் புதிய மாற்றத்துக்கு தயாராகிறீர்கள் என்று அர்த்தம்.
🐘யானை உலா வருவதைப் போல கனவு வந்தால் உங்கள் செல்வம் அதிகரிக்கப்போகிறது.
🐘யானை நிற்பது போல அல்லது தண்ணீரை கடப்பது போல கனவு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் கவனக்குறைவு காரணமாக வரும் சிக்கலை முன்கூட்டியே சொல்லும் விதமாக அமைகிறது.
உலகின் மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக திகழும் யானை நினைவாற்றலில் கூர்மையான விலங்கீனமாக உள்ளது. யானையின் பிரம்மிப்பான தோற்றம் சிலரை ஆச்சர்யப்பட வைக்கும்.
யானை கனவில் வருவது நன்மைகளின் குறியீடு என கனவு சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்