மின்சார இணைப்பு பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள வசதியாக, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் உள்ளூர்மயமாக்கப்பட்ட (localized) போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி அறிவித்துள்ளார்.
இந்த அணுமின் நிலையம் தொடர்ந்து மோதலின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது; வெளிப்புற மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டால் அணுசக்தி பாதுகாப்பு அபாயம் ஏற்படும் என தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
இந்த தற்காலிக அமைதி, மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.










