ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான விவகாரத்தை ஐநா பாதுகாப்புச் சபைக்கு அனுப்ப சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
35 உறுப்பினர்களைக் கொண்ட ர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர் சபையில் 23 நாடுகள் ஆதரவாகவும், 3 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ரஷ்யா, சீனா மற்றும் நைஜர் ஆகியவை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
ஈரான் தனது அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு தொடர்பாக போதிய தகவல்களை வழங்கவில்லை என்றும்,ர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆய்வாளர்களுக்கு தேவையான அணுகலை வழங்கவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஈரான் தொடர்பான விவகாரம் இவ்வாறு ஐநா பாதுகாப்புச் சபைக்கு அனுப்பப்படுகிறது. எனினும், பாதுகாப்புச் சபையில் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால், அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.










