இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்த விழாவின் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




