இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 78 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 32 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 415 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 428 ரூபாய் 30 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபாய் 14 சதம், விற்பனை பெறுமதி 370 ரூபாய் 79 சதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.