நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற, வறண்ட வானிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










