கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இத்தாலி நாட்டை சேரந்த 38 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 10 கிலோகிராம் 323 கிராம் கொக்கைன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.