இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின் அதிகரிக்கும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் தாக்கம் பிற்பகல் வேளைகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்